ஜன. 9, 10, 11ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்! எந்தெந்த மாவட்டங்களில்?

ஜன. 9 முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
ஜன. 9, 10, 11ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்! எந்தெந்த மாவட்டங்களில்?
ENS
Updated on
1 min read

தமிழகத்தில் ஜன. 9 ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

ஜன. 9 அன்று மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜன. 10 அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜன. 11 அன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Summary

TN will get heavy rains from jan. 9 in various districts

ஜன. 9, 10, 11ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்! எந்தெந்த மாவட்டங்களில்?
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்? ஒரு மாநிலங்களவை பதவி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com