

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலர் நத்தம் விசுவநாதன் தலைமையில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கருத்து கேட்புக் கூட்டம் தொடங்கியது.
அதிமுக துணைப் பொதுச் செயலர் நத்தம் விசுவநாதன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி. பொன்னையன், சி.வி. சண்முகம், ப.வளர்மதி ,, ஓ.எஸ். மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன், எம்.சி.சம்பத், முன்னாள் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்டச் செயலர்கள் குமரகுரு , பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள், மக்கள், வணிக சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.