

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பிரேமலதா பேசுகையில், “கட்சியின் ரகசியங்களை மகனிடம்கூட சொல்லாமல், ஒரு நேர்மையான பொதுச் செயலாளாராக நான் இருப்பேன். யாருடன் கூட்டணி என்ற முடிவு எடுத்தாகி விட்டது. ஆனால், அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.
ஏனென்றால், தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. இவர்கள்தான் எங்கள் கூட்டணி என்று யாரும் சொல்லவில்லை. அப்படியிருக்கையில், நாமும் சிறிது ஆலோசித்து, தெளிவாகச் சிந்தித்து, நல்ல தீர்ப்பை எடுக்க வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்! இவ்வளவு நாள்கள் சத்திரியர்களாக வாழ்ந்து விட்டோம்; இனிமேல் சாணக்கியர்களாக வாழ வேண்டும். இன்று ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளுமே யாருடன் கூட்டணி என்று அறிவிக்காதபோது, அந்தக் கூட்டணியில் யார் யார் அங்கம் வகிக்கின்றனர் என்று சொல்லாதபோது, மத்திய மாநில ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லாதபோது - நாம் மட்டும் ஏன் அவசரப்பட வேண்டும்.
ஆனால், தேமுதிக சாதாரண கட்சி அல்ல. நமக்கென்று கௌரவம், மரியாதை, கண்ணியம் உண்டு. அவற்றையெல்லாம் யார் மதிக்கிறார்களோ அவர்களுடன்தான்; என் தொண்டர்களை யார் மதிக்கிறார்களோ அவர்களுடன்தான் என் கூட்டணி.
இவ்வளவு நாள்கள் காத்திருந்தோம். தெளிவாகச் சிந்தித்து, ஒரு மகத்தான கூட்டணியை உங்கள் ஒப்புதலுடன்தான் நாம் அறிவிப்போம். ஆனால், நாம் யாருடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்கள்தான் ஆட்சியமைப்பார்கள” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.