கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை!

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி வெடிக் கொல்லப்பட்டது தொடர்பாக..
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
Updated on
1 min read

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஒருவர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த துணிகர கொலை, அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி (வயது 20). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொளத்தூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான (பி பிரிவு ரெளடி) இவர், சுசித்ரா (வயது 21) என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சுசித்ராவிற்கு ஏற்கெனவே சூர்யா என்பவருடன் திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், ஆதியுடன் உறவிலிருந்த சுசித்ராவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த சில நாள்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதி, தனது தோழி சுசித்ராவிற்கும், இறந்த குழந்தைக்கும் ஆறுதல் கூறுவதற்காக நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசித்ராவை சந்தித்து நலம் விசாரித்த பிறகு, வார்டுக்கு வெளியே உள்ள வராண்டாவில் மதுபோதையில் உறங்கியுள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில், சுசித்ராவின் கணவரான சூர்யா மற்றும் அவரது நண்பர்களான அலிபாய், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் அங்கு வந்துள்ளனர். உறங்கிக்கொண்டிருந்த ஆதியை சுற்றி வளைத்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தலை, கை, கால்கள் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலைப் பகுதி இரண்டாகப் பிளந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Summary

In the Chennai Kilpauk Government Hospital premises, a notorious gangster who was sleeping opposite the maternity ward was brutally hacked to death by a mysterious gang in the early hours of this morning.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com