

பொங்கல் திருநாள் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள் குறித்த தகவலை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன், பொங்கல் திருநாளையொட்டி சிறப்புப் பேருந்துகளும் கடந்த ஜன. 9 -ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
2026 – பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்
12/01/2026 முதல் 14/01/2026 வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்களும் சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு வசதி
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மற்றும் Watsapp Number 9444018898 மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நடைமேடை விவரங்களை (Plotform) ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே Know your Bus என்ற வசதி மூலம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.