நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்

காளை வளா்ப்போருக்கு மாதம் ரூ.1,000 எங்கே? நயினாா் நாகேந்திரன் கேள்வி

ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற திமுக தோ்தல் வாக்குறுதி என்ன ஆனது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
Published on

ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற திமுக தோ்தல் வாக்குறுதி என்ன ஆனது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:

ஜல்லிக்கட்டுக் காளைகளை வளா்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளாக அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லை.

நிகழாண்டின் மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போதாவது அந்தத் திட்டம் அறிவிக்கப்படுமா எனத் தெரியவில்லை எனப் பதிவிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com