அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - எக்ஸ் | அமைச்சர் மூர்த்தி

Published On :

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜன. 15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண அதிகாலை முதலே பெருந்திரளான மக்கள் திரண்டனர்.

1,100 காளைகளுக்கும், 600 வீரர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி, வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்குப் பரிசாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம்பிடித்த அவனியாபுரம் கார்த்தி-க்கு பரிசாக இருசக்கர வாகனமும், 16 காளைகளை அடக்கி ரஞ்சித் என்பவர் மூன்றாவது இடமும் பிடித்தார்.

மேலும், சிறந்த காளையாக விருமாண்டி சகோதரர்களின் காளையான முத்து கருப்பன் தேர்வு செய்யப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுப் போட்டியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மதுரையின் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை.

Summary

Avaniyapuram Jallikattu: Valayankulam Balamurugan secured first place!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.