

நீலகிரியில் கட்டுமானப் பணியில் மண் சரிந்ததில் புலம்பெயர் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கிணறு வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஹ்மான், நசீர், உஸ்மான் என்ற 3 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், பணியின்போது மண் சரிந்து இளைஞர்கள் மீது விழுந்ததில் மண்ணுக்குள் மூவரும் புதையுண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மண் சரிவில் சிக்கிய மூவரையும் மீட்புப் படையினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், இளைஞர்கள் மூவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.