

மேற்கு வங்கத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஸ்வரூப்நகர் பகுதியில் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் ராஜா பதரா (19), ரகிபுல் மொண்டல் (20) ஆகிய இரு இளைஞர்களின் சடலங்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. பலியான இருவரும் நண்பர்கள் என்றும் அதே தத்தபரா பகுதியில் வசித்து வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை இரண்டு இளைஞர்களையும் மொபைலில் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்ப உறுப்பினர்கள் பதட்டமடைந்தனர். ரகிபுலின் மொபைல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த நிலையில், ராஜாவின் மொபைல் போன் அணைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சனிக்கிழமை அதிகாலை, தத்தபராவில் உள்ள ஒரு மா மரத்தில் தொங்கிய நிலையில் அவர்களின் சடலங்கள் உள்ளூர்வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் குறித்து பலியானவர்களின் குடும்பத்தினர் ஸ்வரூப்நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ராஜா மற்றும் ரகிபுலின் தந்தையினர் தங்கள் மகன்கள் கொலை செய்யப்பட்டு பின்னர் மரத்தில் தொங்கவிடப்பட்டதாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீஸார், சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.