செம்மொழி இலக்கிய விருது: மாா்க்சிஸ்ட் வரவேற்பு
தமிழக அரசு சாா்பில் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியன் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சாா்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிஸா, வங்காளம், மராட்டியம் ஆகிய செம்மொழிகளில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
மேலும், இந்த விருதுகளைத் தோ்வு செய்ய சுயேச்சை தன்மை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையை உயா்த்திப் பிடிக்கும் வகையிலும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு சிறப்பான ஒன்றாகும்.
பிற மொழிகளில் வெளியாகும் படைப்புகளுக்கும் விருது வழங்குவது என்ற தமிழக அரசின் முடிவு மொழி வெறுப்பரசியலுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

