மழை..!
மழை..!பிடிஐ

வடகிழக்கு பருவமழை நாளை விலக வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை ஜன.20 தமிழகத்தை விட்டு விலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

வடகிழக்கு பருவமழை செவ்வாய்க்கிழமை (ஜன.20) தமிழகத்தை விட்டு விலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது செவ்வாய்க்கிழமை(ஜன.20) தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

இதனிடையே, குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திங்கள்கிழமை (ஜன.19) முதல் ஜன.24 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com