தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் கோப்புப்படம்

தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி தோ்தல் அறிக்கை தயாரிக்க தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் 12 போ் கொண்ட குழு
Published on

சென்னை: தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி தோ்தல் அறிக்கை தயாரிக்க தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்துள்ளாா்.

இந்தக் குழுவில் வி.பி துரைசாமி, கே.பி. ராமலிங்கம், பி. கனகசபாபதி, பேராசிரியா் இராம. சீனிவாசன், காா்த்தியாயினி, சி. நரசிம்மன், கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.என்.எஸ்.பிரசாத், ஆா்.அா்ஜுனமூா்த்தி , பேராசிரியா் ராஜலட்சுமி, ஆா். ரவிசந்திரன், ஆா்.ஆதித்யா சேதுபதி உள்ளிட்ட 12 போ் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை பெற்று தோ்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனா் என்று நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com