"டப்பா என்ஜின்": முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தமிழிசை பதில்

"டப்பா என்ஜின்" தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்
Updated on
1 min read

"டப்பா என்ஜின்" தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டுcவைத்து கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் என்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் மோடியை விமர்சிக்கிறீர்கள்.

குஜராத், மகாராஷ்டிரம், உத்தர் பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் என்ஜின் (trible engine)கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் பஞ்சாயத்து தேர்தலைக் கூட நடத்த பயந்து தமிழ்நாட்டில் ட்ரபிள் என்ஜின் (trouble engine)கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல் .. தமிழ்நாட்டில் நல்ல டபுள் என்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா என்ஜின்" என்று விமர்சிக்கிறீர்கள் நீங்கள் தான் "தப்பான என்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் முதல்வரே......

தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம், உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் பாஜக - என்டிஏ டபுள் என்ஜின் அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார். இதனை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று கூறியிருந்தார்.

தமிழிசை செளந்தரராஜன்
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 4 மாவட்டங்களில் மழை!
Summary

Former BJP state president Tamilisai Soundararajan has responded to CM Stalin's criticism regarding the "dappa engine".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com