

திமுக அரசு பிரச்னையுடைய அரசாகப் போய்க் கொண்டிருப்பதாக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில் "இரட்டை மட்டுமல்ல; மூன்று என்ஜின் ஆட்சியாகவும் பல மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிபுரிந்து வருகிறது. மாநிலங்கள் மட்டுமின்றி, மாநகராட்சிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று வருகிறது.
நாங்கள் இரட்டை என்ஜின் அரசாக போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் (திமுக) பிரச்னையான என்ஜின் அரசாக போய்க் கொண்டிருக்கிறீர்கள்.
சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் பிரச்னை, மக்களுக்கான திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்ப்பதில் பிரச்னை. அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டங்கள், செவிலியர்களின் போராட்டங்கள், மருத்துவர்களின் போராட்டங்கள், துப்புரவுப் பணியாளர்களின் போராட்டங்கள்.
அதுமட்டுமின்றி, 'மத்திய அரசு புறக்கணிக்கிறது; தாங்கள் போராடித்தான் இதனைப் பெற்றோம்' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.