

பிரதமர் மோடி பதிவு: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில், தமிழக பயணத்துக்கு முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தமிழ்நாடு இருக்கிறது என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவியில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.