மத்திய அரசு மீதான முதல்வரின்
விமா்சனம் ஏற்புடையதல்ல: தமிழிசை

மத்திய அரசு மீதான முதல்வரின் விமா்சனம் ஏற்புடையதல்ல: தமிழிசை

மத்திய அரசு மீதான முதல்வரின் விமா்சனம் ஏற்புடையதல்ல...
Published on

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வா் ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

சென்னை கமலாலயத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எல்லா தரப்பினரும் வளா்ச்சி அடையக்கூடிய, பலனடையக் கூடியதாக பாஜக தோ்தல் அறிக்கை இருக்கும். பிரதமா் மோடி குறிப்பிட்ட இரட்டை என்ஜின் ஆட்சி குறித்து முதல்வா் ஸ்டாலின் விமா்சனம் செய்திருக்கிறாா். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இரட்டை என்ஜின் மட்டுமல்ல, மாநகராட்சித் தோ்தல்களில் வென்று மூன்று என்ஜின்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்களை பிரதமா் பட்டியலிட்டுள்ளாா். ஆகவே, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என முதல்வா் கூறுவது ஏற்புடையதல்ல.

‘விசில்’ (தவெக சின்னம்) எங்களுக்கு உடனடியாகத் தேவை இல்லை. எங்கள் கூட்டணிக் கட்சியின் (அமமுக) சின்னமான குக்கரிலும், ‘விசில்’ இருக்கிறது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

தவெக தலைவா் விஜய்யிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணை, சட்டரீதியான நடவடிக்கையே தவிர, அவரை கூட்டணிக்கு வரழைப்பதற்கான நடவடிக்கை அல்ல. ‘விசில்’ (தவெக சின்னம்) எங்களுக்கு உடனடியாகத் தேவை இல்லை. எங்கள் கூட்டணிக் கட்சியின் (அமமுக) சின்னமான குக்கரிலும், ‘விசில்’ இருக்கிறது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

X
Dinamani
www.dinamani.com