காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ என். சுந்தரம் காலமானார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் என். சுந்தரம் (72) இன்று (ஜன. 26) முற்பகலில் மருத்துவமனைக்கு சென்றபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
1996-2001ல் த.மா.கா சார்பிலும், 2006 - 2011ல் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக என். சுந்தரம் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்து வந்த சுந்தரம் மருத்துவ பரிசோதனைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது காரிலிருந்து கீழே இறங்கிய போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரின் உடல் காரைக்குடி பாரி நகர் அதியமான் 15 -வது தெருவில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த சுந்தரத்திற்கு மனைவி, 2 மகன்கள் உண்டு.
Former Karaikudi MLA N. Sundaram has passed away
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

