விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்ட விளையாட்டுத் திடலில் குடியரசு நாள் விழா திங்கள்கிழமை கோலகலமாகக் கொண்டாடப் பட்டது.
தேசியக்கொடி ஏற்றினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.
தேசியக்கொடி ஏற்றினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட விளையாட்டுத் திடலில் குடியரசு நாள் விழா திங்கள்கிழமை கோலகலமாகக் கொண்டாடப் பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்க விட்டார்.

இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி சாய் பிரனீத்துடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார். பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய போலீஸாருக்கு முதல்வரின் பதக்கம் வழங்கிய ஆட்சியர், பின்னர் பல்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் எம்எல்ஏக்கள் திருக்கோவிலூர் பொன்முடி, விழுப்புரம் இரா. லட்சுமணன், மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அர . அருளரசு, எஸ்.பி. வி.வி. சாய் பிரனீத் சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன்,

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ அறிவழகன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Summary

Republic Day was celebrated with great fanfare at the Villupuram District Sports Ground on Monday.

தேசியக்கொடி ஏற்றினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.
தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com