

ஆடுதுறையில் குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் குடியரசு நாளை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகனசுந்தரம், குடியரசு நாளான இன்று(ஜன. 26) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வரும் அனைவருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 50க்கு போடப்படும் என்ற தெரிவித்திருந்தார்.
அதுபோல், இன்று காலை 9.30 மணிக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று பெட்ரோலை நிரப்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதனால், அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.