எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யச் சொல்லி வைகோவிடம் முதல்வர் கூறினாரா? என்பது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
மதிமுக செயற்குழு கூட்டம் முடிந்து செய்தியாளர்களுடன் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, "மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என விஜய் சொன்னார். எம்எல்ஏவை அவர் ராஜிநாமா செய்யச் சொல்வதில் எந்த தவறும் இல்லை" என்று கூறினார். பின்னர், தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தவெகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும் வைகோ அறிவித்தார்.
இந்நிலையில் வைகோ பேசியது பற்றி அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில்,
"எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யுங்கள் என்று நாங்கள் யாரையும் சொல்லவில்லை. திமுகவுடன் பயணிக்க முடியாது என்ற நிலையில் இருப்பதை வைகோ அனைவரிடமும், எங்களிடமும் தெரிவித்தார். அதன்பிறகு அது எம்எல்ஏக்களின் முடிவு. நாங்கள் எந்த ஆதாயத்திற்காகவும் யாரையும் ராஜிநாமா செய்யுங்கள் என்று சொல்லவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
'ராஜிநாமா செய்தால் அவர்களை தவெக சார்பில் போட்டியிட்டு ஜெயிக்க வைக்கிறேன்' என்று எங்களுடைய முதல்வர் 100% ஒருபோதும் சொல்லவில்லை. அங்கு நடந்தது என்னவென்று வைகோவிடம் கேளுங்கள், அவர் விளக்கம் கொடுப்பார்" என்று தெரிவித்தார்.
Summary
Chief Minister Vijay did not say that to Vaiko: NirmalKumar clarifies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு | Minister Nirmalkumar |

தவறான நபருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை: வெங்கட நாராயணா விவகாரத்தில் அமைச்சர் பதில்

அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜிநாமா விவகாரம் தீர்க்கப்பட்டது: டி.கே. சிவகுமார்
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |




