கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 5:07 pm IST

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 3 ஆம் தேதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக, இன்று(ஜூலை 1) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Story image

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி தென்காசி, திருநெல்வேலி திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 17 districts, including Chennai, over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.