சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம், சட்டவிரோதமாக இணையத்தி்ல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்க்ஷன்ஸ் அளித்த புகாரில், சென்னை சைபர் குற்றவியல் போலீஸார், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமின்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சி. குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தநிலையில், சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜன நாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது. வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Summary
Bail pleas of two individuals dismissed in the 'Jana Nayagan' leaked case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏ சான்றிதழ்! ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?

ஜூனிலும் வெளியாகாத ஜன நாயகன்?

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்

ஜன நாயகன் வெளியீடு எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!
விடியோக்கள்

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


