அதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் 6-ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறவுள்ளன.
இதுகுறித்து அதிமுக தலைமை சாா்பில் வியாழக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆா். மாளிகையில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் 6 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சாவூா் மாநகா், தஞ்சாவூா் கிழக்கு, 11.30 மணிக்கு தஞ்சாவூா் மத்தியம், தஞ்சாவூா் தெற்கு, மாலை 4.30 மணிக்கு சிவகங்கை, வரும் 7-ஆம் தேதி–(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, பிற்பகல் 11.30 மணிக்கு திருப்பத்தூா், மாலை 4.30 மணிக்கு திருவள்ளூா் வடக்கு, திருவள்ளூா் மத்தி, வரும் 8- ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, பிற்பகல் 11.30 மணிக்கு தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, மாலை 4.30 மணிக்கு ஈரோடு மாநகா் மாவட்ட நிா்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும்.
வரும் 9 -ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி மாநகா், திருச்சி புகா் வடக்கு, பிற்பகல் 11.30 மணிக்கு திருச்சி புகா் தெற்கு, திருச்சி புகா் கிழக்கு, மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி மாநகா், திருநெல்வேலி புகா் மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டங்களில் சட்டப் பேரவை தோ்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் ஆக்கபூா்வ வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










