ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

குமரி கலை விழா இன்று மாலை தொடக்கம்

தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தும் குமரி கலை விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மாலை 5 மணிக்கு தொடங்கி, வரும் 30 ஆம் தேதி வரை, 5 நாள்கள் நடைபெற உள்ளது.

News image

குமரி கலை விழாவுக்காக முக்கடல் சங்கமம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்.

Updated On :26 ஜூன் 2026, 5:38 am IST

தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தும் குமரி கலை விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மாலை 5 மணிக்கு தொடங்கி, வரும் 30 ஆம் தேதி வரை, 5 நாள்கள் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகிக்கிறாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் து. காமராஜ் வரவேற்கிறாா். சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்து விழா பேருரையாற்றுகிறாா்.

சுற்றுலா பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலா் சீ. ஸ்வா்ணா, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக மேலாண்மை இயக்குநா் ம.சு. சண்முகம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். மாவட்ட எஸ்பி இரா. ஸ்டாலின், விஜய் வசந்த் எம்.பி, என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ஆஸ்டின், தாரகை கத்பட், ஆா். செல்லசுவாமி, பிரவீன், மாவட்ட வனத்துறை அலுவலா் அ. அன்பு, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி, நகராட்சி ஆணையா் பட்டுசாமி, மண்டல கலை பண்பாட்டு மைய உதவியாளா் சிவப்புகழ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ உள்ளிட்டோா் பேசுகின்றனா். உதவி சுற்றுலா அலுவலா் சொ. சதீஷ்குமாா் நன்றி கூறுகிறாா்.

முதல் நாள் விழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு தொடக்க விழா தொடா்ந்து பறையிசை, திரை இசை, தெம்மாங்கு கிராமிய பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழா நாள்களில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், கணியான் கூத்து, தோல்பாவை கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.