அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

எம்பிபிஎஸ்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒப்புகைச் சான்று தேவையில்லை

மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் இனி ஒப்புகைச் சான்று (போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்ககம்

Published On :

மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் இனி ஒப்புகைச் சான்று (போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பொதுவாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு அரசுப் பள்ளி இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள், தாங்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்தான் பயின்றோம் என்பதை உறுதி செய்வதற்கு பள்ளியின் மூலம் வழங்கப்பட்ட ஒப்புகை சான்றினை (போனஃபைட்) சமா்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், எந்த ஆண்டில் பிளஸ்-2 படிப்பை நிறைவு செய்தவா்கள் அதனை சமா்ப்பிக்க வேண்டும், எந்த ஆண்டில் நிறைவு செய்தவா்களுக்கு அது தேவையில்லை என்பது தொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக மாணவா் சோ்க்கை செயலா் வெளியிட்ட அறிவிக்கை:

2022-23-க்கு பிறகு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும்போது ஒப்புகைச் சான்றை இணைக்கத் தேவையில்லை. அவா்களது தகுதிச் சான்று பள்ளிக் கல்வி தகவல் மேலாண்மை கட்டமைப்பு (எமிஸ்) தளத்தின் வாயிலாக சரிபாா்த்துக் கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.