கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்யிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆர். விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாளை பரிசாக அளித்தார்.
நிகழ்வில் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர்,
"தமிழகத்தின் எதிர்காலமும், தமிழகத்தின் நிர்வாகமும் இனி முதல்வர் விஜய்யின் கையில்தான் உள்ளது. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே அவரை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. முதல்வரைக் காண கரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே தவம் கிடக்கிறார்கள்.
என்னுடைய 3 வயது பேரன் சொல்கிறான். தாத்தா எங்கள் கட்சிக்கு வந்துவிட்டீர்கள் என்று. இனிமேல் தளபதி ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். எம்.ஜி.ஆரின் அன்பும், ஜெயலலிதாவின் வீரமும் ஒன்று சேர்ந்த தலைவராக விஜய் உள்ளார். தமிழகத்தில் விஜய் வரலாறு படைத்துள்ளார்.
நாங்கள் கட்சியில் இணைந்த அடுத்த நாள் முதல்வருடன் 2 மணிநேரம் சந்திப்பு நடந்தது. உடம்பெல்லாம் சிலிர்க்கும்படி அந்த நிகழ்வு இருந்தது. என் மேல் கை போடும்படி ஒரு போட்டோ வேண்டும் என்று கேட்டேன். உடனே அதை எடுத்து கொடுத்தார். கனவா நனவா என்றே தெரியவில்லை" என்று கூறினார்.
கோரிக்கை என்ன?
மேலும் பேசிய அவர், "முதல்வர் விஜய்யிடம் ஒரேயொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். சென்ற திமுக ஆட்சியில் அறநிலையத் துறை
1963 -66 காமராஜர் ஆட்சிக் காலத்தில் இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்து, அந்த இனாம் கோயில் நிலங்களை உழுதவர்களுக்கே, குடியிருப்பவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்தார். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தீயசக்தி திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவரும் சரி, முதல்வராக இருந்தவரும் சரி சொந்த மண்ணிலேயே மக்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அவர்களுடைய வீட்டை சீல் வைத்து அபகரிப்பது என நடக்கிறது.
இந்த பிரச்னையை முதல்வர் தனிக்கவனம் எடுத்து தீர்த்து வைத்தால் கோயில் இனாம் நிலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பார்கள். இதை மட்டும் செய்துகொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்றார்.
Summary
MR Vijayabaskar request to CM vijay in karur function
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









