மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

செந்தில் பாலாஜி.

Published On :10 ஜூலை 2026, 5:46 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 59,724 வாக்குகள் பெற்று தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் வெற்றியை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த வாக்காளர் பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு வாக்காளர் எந்தத் தொகுதி தேர்தலையும் எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

எந்தவொரு தொகுதி தேர்தலை எதிர்த்து யார் வேண்டுமாலும் வழக்கு தொடர அனுமதித்தால், ஒவ்வொரு தேர்தலுக்கும் பிறகு ஏராளமான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த மனுதாரர், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல, வாக்காளரும் அல்ல என கூறி, செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Summary

The case filed against Senthil Balaji, who contested and won the Assembly election from the Coimbatore South constituency, has been dismissed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.