குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!

குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:04 pm IST

குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும், தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ. 35 கோடி லஞ்சமாக தருவதாகவும் தொலைபேசி மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் துறை ஆணை ஏ.அமல்ராஜிடம் புகாா் அளித்தார்.

இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்குத் தொடா்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இளையராஜா எம்எல்ஏவிடம் பேசியது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூ-டியூபரும், கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில்கூட என்னுடைய பெயர் இடம்பெறவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போலீஸார் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக, இதே வழக்கில் செந்தில்பாலாஜியின் சகோதரார் அசோக்குமார் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவருக்கும் முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Summary

The Madras High Court has ordered the grant of anticipatory bail to former Minister Senthil Balaji and his brother Ashok Kumar in the horse-trading case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.