ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட 5 படிப்புகள்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட 5 படிப்புகள்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 7:06 am IST

சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 29 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,920 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 85 சதவீத இடங்களில், 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.

அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்நிலையில், சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2026-2027-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை இணையதளத்தில் ஜூலை 13-ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ளதால், விண்ணப்பிக்கும்போது நீட் தோ்வு அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

யோகா - இயற்கை மருத்துவம்: அதேபோல, சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 17 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசுக் கல்லூரியில் 160 இடங்களும், 20 தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 35 சதவீத இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2026-2027-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்குஇணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்த 5 வகையான படிப்புகளுக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா் வாரிசு, விளையாட்டு வீரா் ஆகிய சிறப்பு பிரிவுகளில் விண்ணப்பிப்பவா்கள் மட்டும் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்ககம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும். கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.