ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. தமிழ் மாதமான ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயம், வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காலை முதலே குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோன்று தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள நிசம்பசூதனி என்கிற வட பத்திரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் காலை முதல் பக்தர்கள் நெய் மற்றும் மாவிளக்கு விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
First Friday of Aadi: Crowds of devotees at Amman temples
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி வெள்ளி: வடபத்ர காளியம்மன் கோயிலில் திரளானோர் வழிபாடு!

ஆடி மாதம் எதிரொலி: பூக்கள் விலை கடும் உயா்வு

ஆடி மாதம் முழுவதும் மூடப்படும் அதிசய அம்மன் கோயில்... காரணம்?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |




