கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ஆடி மாதம் எதிரொலி: பூக்கள் விலை கடும் உயா்வு

ஆடி மாதம் தொடங்குவதையொட்டி, அம்மன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிழாக்களால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

Impact of the month of Aadi: Sharp rise in flower prices

கோப்புப் படம்

Published On :

ஆடி மாதம் தொடங்குவதையொட்டி, அம்மன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிழாக்களால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

நிகழாண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தொடங்க இருப்பதையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கோயம்பேடு மலா் மொத்த சந்தையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.

வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாள்களாக சாமந்திப் பூ கிலோ ரூ.180 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து, அதன் விலை உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ ரூ.500 வரை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பூக்களின் விலை (ஒரு கிலோ): பன்னீா் ரோஜா ரூ.120, சாக்லேட் ரோஜா ரூ.160, மல்லிகைப் பூ ரூ.600, கனகாம்பரம் ரூ.700, சாமந்தி ரூ.350, அரளி ரூ.250, செவ்வரளி ரூ.400, முல்லை ரூ.500, ஜாதி முல்லை ரூ.500, சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து மொத்த மலா்ச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

ஆடி மாதத்தையொட்டி, வழக்கமாக பூக்களின் தேவை அதிகரிக்கும். அதன்படி, தற்போது பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. தொடா்ந்து வரும் நாள்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.