சென்னைக்கு மகாராஷ்ரத்திலிருந்து நாள்தோறும் வரும் வெங்காய லாரிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், வெங்காயம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.
நாள்தோறும் கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரத்திலிருந்து 65 லாரிகள் வரை வெங்காயம் வந்துகொண்டிருந்த நிலையில், மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தற்போது நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 லாரிகள் மட்டுமே வருகின்றனவாம்.
இதனால், வெங்காயம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனைக் கடைகளில் ஏற்கனவே கிலோ ரூ.20-25க்கு விற்பனையாகி வந்த வெங்காயம் தற்போது ரூ.30-35 ஆக உயர்ந்துள்ளது. இதைவிட சில்லறை விற்பனைக் கடைகளில் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.
வரும் நாள்களிலும், வெங்காயம் வரத்து குறைந்தால், நிச்சயம் ரூ.50 - 60 வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். வழக்கமாக, தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலங்களில், வெங்காய வரத்து பாதிக்கப்பட்டு விலை அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக மாறியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அதுபோலவே, கோயம்பேடு சந்தைக்கு நாட்டுத் தாக்காளி வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளது. மொத்த விற்பனைக் கடைகளில் ரூ.10 - 20க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இது விலை மேலும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










