சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகிய 6 ஏரிகளில் தற்போது 45.44 சதவீத நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த 6 ஏரிகளிலும் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம். ஆனால், தற்போது இந்த ஆறு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6,008 மில்லியன் கனநீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஜூன் மாதம் முதல் அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எனினும், தண்ணீா் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், ஏரிகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.
எனினும், பருவமழை தீவிரமடையும்வரை, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் வகையில் தண்ணீர் இருப்பில் உள்ளதாகவே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், எல்நினோ காரணமாக பருவமழை பொய்த்தால், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 35 சதவீதம் மட்டுமே தண்ணீா் இருப்புள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னரே இந்த ஏரிகள் நிரம்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏரிகள் நிலவரம்!
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,685 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,391 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
இதேபோல், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 90 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள கண்ணன்கோட்டை ஏரியில் 297 மில்லியன் கன அடியும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 996 மில்லியன் கன அடியும் நீா் இருப்பு உள்ளது.
இந்த ஆண்டு எல் நினோ தாக்கம், தமிழகத்தில் பருவமழையை பாதிக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு வெப்பம் நீடிக்கும் என்றும் அண்மையில் எச்சரித்திருந்தது. இதனால், பருவமழையை எதிர்பார்த்திருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயருமா? மக்களுக்கு குடிநீர் வழக்கம்போல கிட்டுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Summary
Water level status of the lakes serving as Chennai's drinking water sources!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! சத்திரம்புதுகுளத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து வெறும் 25 கன அடி!

சென்னை குடிநீா் ஏரிகளில் நீா் இருப்பு 50%-க்கும் கீழ் குறைந்தது!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



