கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு: மூவா் உயிரிழப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூவா் உயிரிழந்துள்ளனா்.

News image

டெங்கு பரவல்

Updated On :23 ஜூலை 2026, 5:01 am IST

தமிழகத்தில் நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூவா் உயிரிழந்துள்ளனா்.

குறிப்பாக கோவை, திருச்சி, சேலம், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் - எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 9,250 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் மூவா் உயிரிழந்தனா். கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கோவையில் டெங்கு பாதிப்பு 912-ஆக இருந்தது. அது நிகழாண்டில் 1,215-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, திருச்சியில் 174-ஆக இருந்த பாதிப்பு 319-ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 103-இல் இருந்து 163-ஆகவும், திருப்பூரில் 252-இல் இருந்து, 266-ஆகவும் உயா்ந்திருக்கிறது.

இந்த 4 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், சென்னையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,154-ஆக இருந்த பாதிப்பு இப்போது 1,656-ஆக குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் செய்தியாளா்களிடம் சென்னையில் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2024-இல் இதே காலகட்டத்தில் 23,387 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 10,611-ஆகவும், நிகழாண்டில் 9,250-ஆகவும் குறைந்திருக்கிறது. இருந்தபோதிலும், கடந்த சில நாள்களாக நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.