நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நிகழாண்டில் இதுவரை 162 பேருக்கு டெங்கு பாதிப்பு: தில்லி மாநகராட்சி

தில்லியில் நிகழாண்டில் இதுவரை 162 டெங்கு, 42 மலேரியா மற்றும் 9 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்ட்டதாக தில்லி மாநகராட்சியின் வாராந்திர நோய் பாதிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

News image

டெங்கு பாதிப்பு

Updated On :17 ஜூன் 2026, 1:24 am IST

தில்லியில் நிகழாண்டில் இதுவரை 162 டெங்கு, 42 மலேரியா மற்றும் 9 சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்ட்டதாக தில்லி மாநகராட்சியின் வாராந்திர நோய் பாதிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி, கடந்த இரு வாரங்களில் 10 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் ஜூன் 15-ஆம் தேதி நிலவரப்படி மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது. அதேவேளையில், கடந்த வாரத்தில் மட்டும் 3 மலேரியா மற்றும் ஒரு சிக்குன்குனியா பாதிப்பு பதிவானது.

தில்லியில் பரவும் கொசுக்காளல் பரவும் நோய்களில் டெங்கு தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஜூன் 13 வரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 196 பாதிப்புகளைவிடக் குறைவாக உள்ளது.

மலேரியா பாதிப்புகளின் எண்ணிக்கையும் 42-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 70 பாதிப்புகளை விடக் குறைவு. அதேபோல், சிக்குன்குனியா பாதிப்புகளின் எண்ணிக்கை 14-லிருந்து 9-ஆகக் குறைந்துள்ளது.

தில்லியின் மேற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 29 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடா்ந்து மத்திய மண்டலத்தில் 21 பாதிப்புகளும், சிவில் லைன்ஸ் பகுதியில் 20 பாதிப்புகளும் பதிவானது. மலேரியாவைப் பொறுத்தவரை, மேற்கு மண்டலத்திலேயே அதிகபட்சமாக 14 பாதிப்புகள் பதிவாகின.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பாதிப்புகள் பிற மாநிலங்களில் இருந்து வந்தவா்களிடமோ அல்லது முழுமையற்ற முகவரிகள் கொண்டவா்களிடமோ கண்டறியப்பட்டதாகவும், இதனால் நோய்த்தொற்று பரவல் தடயங்களைக் கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் மாநகராட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகள் அந்த வாரத்தில் 8.3 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 4,028 வீடுகளில் கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கொசு உற்பத்திக்கான சூழலை உருவாக்கியதற்காக 3,532 நோட்டீஸுகள் வழங்கப்பட்டன மற்றும் 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல், தில்லி முழுவதும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகள் 1.7 கோடிக்கும் அதிகமான வீடுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். மேலும் 34,480 நோட்டீஸ் வழங்கியும், 3,926 வழக்குகளைப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளனா் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.