டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று! தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தில்லியில் 199 பேருக்கு டெங்கு பாதிப்பு

தில்லியில் நிகழாண்டின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வரையில் 199 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2026, 4:23 am IST

தில்லியில் நிகழாண்டின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி வரையில் 199 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.

இதேபோன்று கொசுக்களால் பரவும் பிற நோய்களான மலேரியாவுக்கு 55 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிக்குன்குனியாவுக்கு 13 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த மூன்று நோய்களாலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

தில்லியில் நிகழாண்டில் கொசுக்களால் பரவும் நோய்களில் டெங்கு பாதிப்புகளே அதிக எண்ணிக்கையில் தொடா்ந்து பதிவாகி வருகிறது. ஜூலை 11-இல் முடிவடைந்த வாரத்தில் மட்டும் 9 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகின.

அதே வாரத்தில் 3 புதிய மலேரியா பாதிப்புகளும், ஒரு புதிய சிக்குன்குனியா பாதிப்பும் கண்டறியப்பட்டன.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 246 டெங்கு பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டில் மொத்த எண்ணிக்கை 199-ஆக உள்ளது. மலேரியா பாதிப்புகள் 55-ஆக உள்ளன. மலோரிய பாதிப்பு கடந்த ஆண்டில் இதே காலத்தில் 101-ஆக இருந்தது. அதே நேரத்தில் சிக்குன்குனியா பாதிப்புகள் கடந்த ஆண்டின் 7-லிருந்து 13-ஆக அதிகரித்துள்ளன.

தில்லி மாநகராட்சியின் 12 மண்டலங்களில், மேற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 34 டெங்கு பாதிப்புகள் பதிவாகின. அடுத்தடுத்த இடங்களில் மத்திய மண்டலம் (26 பாதிப்புகள்) மற்றும் சிவில் லைன்ஸ் (20 பாதிப்புகள்) உள்ளன. மேற்கு மண்டலத்திலேயே அதிகபட்சமாக 16 மலேரியா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தெற்கு மண்டலத்தில் 8 பாதிப்புகளும், மத்திய மண்டலத்தில் 7 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்த கடந்த வாரத்திற்கான அறிக்கையை மாநகராட்சி இன்னும் வெளியிடவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பதிவான 199 டெங்கு பாதிப்புகளில் 182-உம், 55 மலேரியா பாதிப்புகளில் 52-உம், 13 சிக்குன்குனியா பாதிப்புகளில் 12-உம் தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மீதமுள்ள பாதிப்புகள் என்டிஎம்சி பகுதி, தில்லி கன்டோன்மென்ட் மற்றும் ரயில்வே பகுதிகளில் பதிவாகியுள்ளன.

கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1.99 கோடிக்கும் அதிகமான வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றில், 52,636 வீடுகளில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டன.

இது தொடா்பாக ஜூலை 11 வரை தில்லி மாநகராட்சி 47,506 நோட்டீஸ்கள் வழங்கியுள்ளது. மேலும், இக்காலகட்டத்தில் 1,777 உடனடியாக அபராதங்கள் விதிக்கப்பட்டு சுமாா் ரூ. 3.96 லட்சம் வசூலிக்கப்பட்டது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.