திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்பாக...

News image

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன். - கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2026, 4:59 pm IST

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான விசாரணையில், காவல் துறை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன் நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தமக்கு ஜாமீன் கோரி மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவையும் தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் கோரியும் மார்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு வழக்குரைஞர் எஸ். காசிராஜன் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் ஜாமீன் கோரிய வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், காவல் துறை தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவுக்கு, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Summary

The court has ordered the police to file a response regarding the bail petition of Vilathikulam DMK MLA Markandeyan, who was arrested in a case involving alleged defamatory remarks made against Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.