மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: எம்.பி கனிமொழி கண்டனம்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக...

News image

எம்.பி கனிமொழி கண்டனம் - எக்ஸ்

Updated On :20 ஜூலை 2026, 11:19 am IST

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக மக்களவை உறுப்பினரும் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் பேரவையை பூட்டினாலும் எலும்பை உடைப்போம் என மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையானது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி மற்றும் போலீசார் திங்கள்கிழமை காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வீட்டுக்கு வந்தனர்.

அப்போது நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த எம்எல்ஏவிடம் தங்களை கைது செய்ய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரண்ட திமுகவினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டவாறு போலீஸ் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

ஆவர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கனிமொழி கண்டனம்

இந்த நிலையில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கண்டன பதிவில்,

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.

உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Summary

DMK MLA Markandeyan arrested: MP Kanimozhi condemns the move

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.