திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

மூதாட்டி கால் விரலை கடித்த எலி! திருச்சி அரசு மருத்துவமனை விளக்கத்தால் அதிர்ச்சி

மூதாட்டி கால் விரலை எலி கடித்த சம்பவத்தில் திருச்சி அரசு மருத்துவமனை விளக்கம் கொடுத்திருப்பது பற்றி..

News image

மருத்துவமனையில் மூதாட்டி - DPS

Updated On :23 ஜூலை 2026, 3:59 pm IST

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு மருத்துவமனை அளித்த விளக்கம் இன்னும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்ததால், பெரிய காயங்களோ, ரத்தப் போக்கோ இல்லை. அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வார்டில் எலித் தொல்லை வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் இவரது படுக்கைக்கு வந்த எலி ஒன்று, தமிழ் கொடியின் கால் கட்டை விரலைக் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியைப் பரிசோதித்துத் தேவையான தடுப்பூசியைச் செலுத்தினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் விஜயகுமார் கூறுகையில், அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. எனது தாய் சர்க்கரை நோயாளி என்பதால், அவரது காலில் எலி கடித்தது உடனடியாக அவருக்குத் தெரியவில்லை. தற்போது அவரது கட்டை விரலைச் சுற்றி மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனை வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், மூதாட்டி எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.

ஜூலை 23ஆம் தேதி அதிகாலை மூதாட்டியின் கால் விரலை எலி கடித்தது. இதில் அவருக்கு ஆழமான காயமோ, ரத்தப் போக்கோ இல்லை. கால் கட்டை விரல் தோலில் சிராய்ப்புக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மூதாட்டி உடல்நிலை சீராக உள்ளது ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rat bites elderly woman's toe! Shocking explanation from Trichy Government Hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.