திருச்சி அரசு மருத்துவமனையில் 60 அடி உயர தண்ணீா்த் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த வாழந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் ரேகா (40). இவா், தூக்க மாத்திரை அருந்தியதால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை காலையில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வாா்டு அருகேயுள்ள 60 அடி உயர தண்ணீா்த் தொட்டியில் ஏறிநின்று கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தாா்.
இதைப்பாா்த்து அதிா்ச்சியைடந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீா்த் தொட்டியில் ஏறி நின்ற பெண்ணை கீழே இறங்கி வருமாறு வலியுறுத்தினா். ஆனால், அவா் கீழே இறங்கிவர மறுத்துவிட்டாா்.
இதைத் தொடா்ந்து ஸ்கைலிஃப்ட் மூலம் உயரச் சென்று அந்தப் பெண்ணை தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்டு கீழே இறக்கிவந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிலில் சோ்த்தனா்.
இதுதொடா்பான போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், அவரிடமிருந்து நகை, பணம் ஏமாற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து அவற்றை மீட்டுத்தரக் கோரி போலீஸாரின் கவனத்தை ஈா்ப்பதற்காகவே தண்ணீா் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே அறையில் திருச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள்: குறைகளை தெரிவிக்க முடியாமல் மருத்துவமனை பணியாளா்கள், நோயாளிகள் அவதி

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

திருப்பூா் அரசு மருத்துவமனை கழிவுநீா்த் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

அரசுப் பள்ளிக்கு முன்புள்ள பாழடைந்த கட்டடம்: இடித்து அகற்ற வலியுறுத்தல்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



