மிக அரிதான ரத்த மாறுபாடு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவருக்கு, தன்னுடைய ஸ்டெம் செல் தானமளித்து உயிர் கொடுத்தவரை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் ஸ்டெம் செல் தானம் அளிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் ஸ்டெம் செல் தானமளிக்க முன்வந்து பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதன் காரணமாகவும், மருத்துவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சாம்னு ஜான் (40) என்ற இளைஞர், தனக்கு மறுவாழ்வு கொடுத்த ஸ்டெம்செல் தானமளித்த புது தில்லியைச் சேர்ந்த 25 வயதான பரிதோஷை சந்தித்தார். ஸ்டெம் செல் தானம் செய்வதற்கு முன்பதிவு செய்வதை பராமரித்து வரும் டிகேஎம்எஸ் அறக்கட்டளை மூலம் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எலும்பு மஞ்சையானது நல்ல ஆரோக்கியமான ரத்த செல்களை உருவாக்குவதை நிறுத்தும் மிகத் தீவிரமான அப்ளாஸ்டிக் அமீனியா என்ற அரிதான நோயால் சாம்னு பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது ரத்தத் தட்டுகள் அளவு அபாய அளவை விடவும் குறைந்திநரந்தது. 18 மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, இவருக்கு பொருந்தும் ஸ்டெம் செல் தானமளிப்பவரான பரிதோஷ் கண்டுபிடிக்கப்பட்டு இவருக்கு ஸ்டெம் செல் மாற்றும் சிகிச்சை அளிக்ப்பட்டது.
ஸ்டெம் செல் தானம் கிடைத்ததால் எனக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்று சாம்னு ஜான் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

உண்மைச் சம்பவங்களால் உருவான உயிர் திரைப்படத்தின் ஓடிடி தேதி!

கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரசுப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட ஸ்டெம் ஆய்வகம்,ஸ்மாா்ட் கழிப்பறை: தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்.
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



