5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி....

News image

சென்னை உயர்நீதிமன்றம் - ENS

Updated On :31 ஜூலை 2026, 6:22 pm IST

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நீட்டித்தது உயர்நீதிமன்றம்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த வெங்கடஜலபதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 10இல் பிறப்பித்த உத்தரவில் ஜூலை 31 வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை வதிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 பெரும்பான்மை எண்ணிக்கை அக்கட்சிக்கு கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றாா்.

பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Madras High Court has issued an order extending the stay on conducting by-elections in 5 constituencies in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.