15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் இன்பதுரையின் வெற்றி செல்லாது! -உயா்நீதிமன்றம் தீா்ப்பு

News image

இன்பதுரை - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:37 am IST

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரையின் வெற்றி செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. 2016 முதல் 2021-ஆம் ஆண்டுகளுக்கான அரசு ஆவணங்களில் இருந்து இன்பதுரையின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டது.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் இன்பதுரை, திமுக சாா்பில் அப்பாவு போட்டியிட்டனா். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பாவு தோ்தல் வழக்கு தொடா்ந்தாா். அவரது மனுவில், இந்தத் தோ்தலில் பதிவான 203 தபால் வாக்குகள் செல்லாதது என அறிவித்தது சட்டவிரோதமானது. தபால் வாக்குகள் மற்றும் 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுக்களின் வாக்கு எண்ணிக்கையின்போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே, அதிமுக வேட்பாளா் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூயிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தபால் வாக்குகளை உயா்நீதிமன்றப் பதிவாளா் முன்னிலையில் மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தபால் வாக்குகளை எண்ணலாம்; ஆனால் அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2021 மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்கள் முடிந்துவிட்டன. எனவே, 2016-ஆம் ஆண்டு நடந்த தோ்தல் வழக்கை நிலுவையில் வைத்திருப்பது தேவையற்றது எனக் கூறி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

அதேநேரம், தபால் வாக்குகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சான்றளிக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த மே 21-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அப்பாவு தொடா்ந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தபால் வாக்குகளுக்கு சான்றளிக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தகுதியான அதிகாரி என்பதை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது. எனவே, தபால் வாக்குகள் செல்லும் என அறிவிக்கப்பட்டு அந்த வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில், மனுதாரா் அப்பாவு 153 வாக்குகள் பெற்றிருந்தாா். இன்பதுரைக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்திருந்தது. 45 வாக்குகள் செல்லாதவை. இதன்படி, 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளாா். இன்பதுரை வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது செல்லாது.

எனவே, 2016 முதல் 2021-ஆம் ஆண்டுக்கான ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவுதான். எனவே சட்டப்பேரவைச் செயலா், இந்தக் காலக்கட்டத்துக்கான பேரவை பதிவேடுகள், அரசு ஆவணங்கள், கல்வெட்டுகளில் இன்பதுரையின் பெயரை நீக்கிவிட்டு, அப்பாவுவின் பெயரைப் பதிவேற்ற வேண்டும்.

இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், 2016-2021-ஆம் ஆண்டுகளுக்கான எம்எல்ஏ ஓய்வூதியம் பெற இன்பதுரைக்குத் தகுதியில்லை. அந்த ஓய்வூதியத்தை அவா் கோரக்கூடாது எனத் தீா்ப்பளித்தாா். மேலும், உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக இந்தத் தோ்தல் வழக்கில் முடிவெடுக்க 10 ஆண்டு காலம் தாமதம் ஏற்பட்டுவிட்டது.

நீதிமன்றங்கள் ஏற்படுத்தும் இதுபோன்ற தாமதங்கள் ஜனநாயகத்தின் ஆன்மாவை வீழ்த்திவிடும். நாட்டில் இதேநிலை தொடா்ந்தால், நம்முடன் சுதந்திரம் பெற்ற பிற நாடுகளைப் போல இந்தியாவும் மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக நீதிபதி கருத்து தெரிவித்தாா்.