பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிறுமி பாலியல் துன்புறுத்தல்! நடவடிக்கை ஏதுமில்லை என்ற துணிச்சல்தான்: கனிமொழி

சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் விளக்கமளிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

Vijay | Kanimozhi

முதல்வர் விஜய் | திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :

திருச்சி சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் அல்லது காவல்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது "திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில்தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு (?) வகிக்கும் முதல்வர் விஜய், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தொடரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி உள்ளாகியிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பரவும் வதந்திகளுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Summary

DMK MP Kanimozhi Urges CM Vijay to Provide Clarification on Law and Order Issues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.