சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
கோடை காலத்தின் கத்தரி வெய்யில் முடிந்த பிறகும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெய்யிலின் தாக்கம் இருந்து வந்தது. வேலூர், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது.
சென்னையிலும் அதிக அளவிலான வெப்பம் பதிவான நிலையில், இன்று இரவு திடீரென மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (இரவு 10 மணி வரை) கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு'' உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Widespread rain in Chennai and its suburbs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை

சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




