திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

வாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு சிகிச்சை! ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் உத்தரவு!

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறித்து...

News image

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை - எக்ஸ்

Updated On :21 ஜூன் 2026, 4:43 pm IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்தனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை அமைச்சர் பர்வேஸ் குமார் இன்று நேரில் சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

Summary

Thiruvallur Ammonia gas leak Chief Minister joseph vijay orders Aadhav Arjuna and Rajmohan to ensure special treatment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.