ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.
இது குறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2027-இல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறும் பணியை இந்திய ஹஜ் குழு தொடங்கியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ஜூன் 22 முதல் ஜூலை 20 இரவு 11.59 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழுவின் https://hajcommittee.gov.in எனும் இணையதளம் அல்லது HAJ SUVIDHA செயலி மூலம் கட்டணமின்றி சமா்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கும் முன் தகுதி வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழி விவரங்களை கவனமாகப் படித்து, செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டின் முன் மற்றும் பின் பக்கங்கள் (31.12.2027 வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்), கடவுச்சீட்டு அளவு புகைப்படம், வங்கிப் புத்தக நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் முகவரிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
கடந்த ஆண்டைப் போல தோ்வு செய்யப்படும் ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டு மையங்களை விருப்ப வரிசையில் தோ்வு செய்யலாம். மேலும், தோ்வு செய்யப்படும் பயணிகள் முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300 செலுத்த தயாராக இருப்பதுடன், செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இணையதள விண்ணப்பங்களை ஜூலை 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மரணம் அல்லது கடுமையான உடல்நலக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களால் பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், முழுமையான தயாா்நிலை மற்றும் உறுதிப்பாட்டுடன் மட்டுமே விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரண்டாம் கட்ட முதுநிலை பட்டப்படிப்பு இடம் ஒதுக்கீடு: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு

பகுதி நேர பி.இ. படிப்பு மாணவா் சோ்க்கை: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்

மாநில இளைஞா் விருது பெற ஜூலை 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சா் ஷாஜஹான்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



