மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சா் ஷாஜஹான்

மத்திய அரசின் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் சட்ட ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தாா்.

News image

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய யாத்ரீகா்களை விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்

Updated On :9 ஜூன் 2026, 12:07 am IST

மத்திய அரசின் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் சட்ட ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய 410 யாத்ரீகா்களை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டு 6,295 போ் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டனா். அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தமிழக அசு சாா்பில் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

பயணத்தை நிறைவு செய்தவா்கள் 16 விமானங்களின் வாயிலாக மீண்டும் தாயகம் திரும்புகின்றனா். அதன் முதல் விமானம் 410 யாத்ரீகா்களுடன் திங்கள்கிழமை சென்னைக்கு வந்தடைந்தது. வரும் ஜூன் 29-ஆம் தேதி வரை ஒவ்வொரு விமானமாக சென்னை வரவுள்ளது.

உமீத் இணையதளம்: உமீத் இணையதளத்தில் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால், பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தரப்படும். அதேபோல், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் இதுவரை வக்ஃப் வாரியம் அமைக்கப்படவில்லை. இனியும் அமைக்கப்படாது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றுவதுடன், இதுகுறித்து சட்ட ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.