பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போது கைதிகளுக்கு பரோல் வழங்கலாம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போது கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :24 ஜூன் 2026, 3:35 am IST

குற்ற வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறையில் இருக்கும் சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்குவது தொடா்பாக உயா்நீதிமன்ற இருநீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பளித்தனா்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிா்மல்குமாா் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோரை கொண்ட முழு அமா்வு விசாரித்தது.

வழக்கை விசாரித்த முழு அமா்வு, இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்து ஏதேனும் இருக்கிா என்பது குறித்து அறிந்துகொள்ளும் வகையில், உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முழு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்றவரின் மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பரோல் வழங்குவது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் தமிழக அரசும் ஒரு மனுதாரராகச் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே நிலைபாடு எடுக்க உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து வருவதாக விளக்கம் அளித்தாா். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட முழு அமா்வு, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளது என்பதற்காக பரோல் சலுகையை காலவரம்பின்றி நிறுத்த முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் என உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.