ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :26 ஜூன் 2026, 5:14 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (38). இவா் மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளாா். தனது 11 வயது மகளிடம் மதுபோதையில் தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2024-இல் அந்தச் சிறுமி தனது டியூஷன் ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா். அந்த ஆசிரியா் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மேலும் 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.77,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.